உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சங்கரா கல்லுாரியில் தொல்லியல் கண்காட்சி

காஞ்சி சங்கரா கல்லுாரியில் தொல்லியல் கண்காட்சி

காஞ்சிபுரம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை., கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், ஐந்து நாள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி துவக்க விழா, கல்லுாரியில் நேற்று நடந்தது.சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் தொல்லியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குனர் முனைவர் பூங்குன்றன், கல்வெட்டு பயிற்சி மாணவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிட, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.பயிலரங்கம் நோக்கம் மற்றும் தொல்லியல் கல்வெட்டியல் அறிமுகம் குறித்தும், பிராமி எழுத்து பயிற்சி குறித்தும் முனைவர் ராசவேலு உரையாற்றினார்.வரலாற்றுக்கு முற்பட்ட காலம் குறித்து ஓய்வுபெற்ற அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், தமிழி மற்றும் அசோக முனைவர் ராசவேலு ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக தமிழ் துறை தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தொல்லியல் கழகம் உள்ளூர் செயலர் வீரராகவன் நன்றி கூறினார்.கண்காட்சிக்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், முனைவர் ஜவஹர்பாபு, ராதாபாலன், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் மதுரைவீரன் குழுவினர் செய்திருந்தனர்.கண்காட்சி நாட்களில் வரலாற்று புத்தக கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்