| ADDED : ஆக 01, 2024 01:13 AM
காஞ்சிபுரம்:அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, செங்கல்பட்டு ரயில் வழித்தடம் செல்கிறது.இந்த ரயில் வழித்தடத்தில், பரமேஸ்வரமங்கலம், மஞ்சமேடு, ஆட்டுப்பாக்கம், சேந்தமங்கலம், கோவிந்தவாடி, ஊவேரி, புதுப்பாக்கம், கூரம், வையாவூர், நத்தப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில் கடவுப்பாதைகள் உள்ளன.இதில், கை சாவி வாயிலாக திறந்து மூடும் ரயில்வே 'கேட்'கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில் மின்வடம் புதைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.இந்த பணிகளை தொடர்ந்து, ஹைட்ராலிக் எனப்படும் தானியங்கி 'கேட்'கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற்றால், தானியங்கி முறையில் ரயில் கடவுப்பாதை கேட் மூடி, மீண்டும் திறக்கப்படும் என, ரயில்வே துறையினர் தெரிவித்து உள்ளனர்.