உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆவடியில் மாநில செஸ் போட்டி சென்னை, திருவள்ளூர் அபாரம்

ஆவடியில் மாநில செஸ் போட்டி சென்னை, திருவள்ளூர் அபாரம்

சென்னை : ஆவடியில் நடந்த சிறுவர்களுக்கான, மாநில அளவிலான ஒரு நாள் செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாணவர்கள் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் ஆதரவில், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், சிறுவர்களுக்கான ஒரு நாள் மாநில செஸ் போட்டி, ஆவடி வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் எட்டு, 10, 12, 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் பெரியவர்களுக்கு தனித்தனியாக, ஓபன் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 655 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில் எட்டு வயது பிரிவில், மாணவரில் செங்கல்பட்டு கிருத்திக் கதிரேசன், மாணவியரில் சென்னை ரிதன்யா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.அதேபோல், 10 வயது பிரிவில் திருவள்ளூர் ஸ்ரீஜித், சென்னை அவிக்னா சக்தி; 12 வயதில் சென்னை பரிதி நாராயணன், திருவள்ளூர் கார்த்திகா; 15 வயதில் காஞ்சிபுரம் பிரசன்னா, சென்னை நக்ஷத்திரா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.ஓபன் பிரிவில், செங்கல்பட்டு சங்கர் முதலிடம் பிடித்து அசத்தினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சர்வதேச மாஸ்டர் பொன்னுசாமி கொங்குவேல், வேலம்மாள் பள்ளி முதல்வர் ஷர்மிளா தேவி உள்ளிட்டோர், ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி