உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பால சன்ஸ்காரசாலா குழந்தைகள்: ஆன்மிக சுற்றுலா

பால சன்ஸ்காரசாலா குழந்தைகள்: ஆன்மிக சுற்றுலா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 30 கிராமங்களில் ஏழை, எளிய மாணவ- -- மாணவியருக்காக பால சன்ஸ்காரசாலா என்ற பெயரில், இலவச பண்பாட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.இங்கு பயிலும் மாணவ- - மாணவியருக்கு பாடப்புத்தகம் மட்டுமின்றி, ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர், வள்ளலார், ஆதிசங்கர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என, ஆன்மிக பெரியோர் களின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டவீரர்கள், தமிழர் கலாசாரம் என, பண்பாட்டு பயிற்சி வகுப்பு இலவசமாகபயிற்று விக்கப்படுகிறது.இங்கு பயிலும் குழந்தைகளை அவ்வப்போதுஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். அதன்படி, கூரம், கீழ்சிறுனை, திருப்பருத்திகுன்றம் கிராமங்களில் உள்ள பால சன்ஸ்காரசாலா எனப்படும் பண்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், 65 குழந்தைகள் ஆன்மிக சுற்றுலாவாக நேற்று காஞ்சிபுரம்வந்தனர்.இதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து காஞ்சி புரம் சங்கரமடத்தில், காம கோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். தொடந்து, உதாசின் பாவாஜி மடத்தில், மடாதிபதி மகராஜ் கர்ஷினி அனுபவானந்த் சுவாமியிடம் ஆசி பெற்றனர்.ஆன்மிக சுற்றுலாவிற்கான ஏற்பாட்டை மாவட்ட துர்காவாகினி அமைப்பாளரும், பால சன்ஸ்காரசாலா ஒருங்கிணைப்பாளருமானகார்குழலி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை