| ADDED : ஜூலை 16, 2024 12:56 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது. மாணவர்களுக்கான இப்போட்டியில், 17 பள்ளி அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.முதல் சுற்று ஆட்டத்தில் பெர்க்ஸ், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் தங்களுக்கான வாய்ப்புகளை புள்ளி களாக மாற்றியதால்,ஆட்டத்தின் இறுதிவரைபரபரப்பு நீடித்தது.கடைசி நிமிடத்தில் பெர்க்ஸ் அணி செய்த தவறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய செயின்ட் பீட்டர்ஸ் அணி வீரர்கள், சாதுர்யமாக புள்ளிகளைச் சேர்க்க, அந்த அணி 37 - -35 என்ற புள்ளிக்கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.முன்னதாக நடந்த போட்டிகளில் அப்துல் ரஹ்மான், என்.எல்.சி., எம்.எஸ்.பி., கமலா சுப்பிரமணியம் ஆகிய பள்ளி அணிகள், முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.