உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு

பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு

உத்தரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் உள்ளது எல்லைஅம்மன் கோவில். இந்த கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பிலான பொதுக் குளம் உள்ளது.கோவில் விழா உள்ளிட்ட விசேஷ நாட்களில், இந்த குளத்து நீரை பயன்படுத்தி அம்மனுக்கு பூஜைகள் மேற்கொள்வது வழக்கம். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், இந்த கோவில் குளக்கரை பகுதியை சுற்றிலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கால்நடை கொட்டகை மற்றும் வைக்கோல் குவித்து ஆக்கிரமித்துள்ளனர்.மேலும், சில மாதங்களாக இக்குளத்திற்கான வரத்து கால்வாய்கள் துார்ந்து, மழைக்காலங்களில் குளத்திற்கு நீர் வரத்து இல்லாத நிலை உள்ளது.இதனால், மழைக்காலங்களில் குளத்தில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாமல் உள்ளது. எனவே, இந்த குளக்கரையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தின் நீர் பிடிப்பு பகுதியில் துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !