| ADDED : ஜூன் 03, 2024 04:36 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, செவிலிமேடு பகுதியில், அப்பகுதி தி.மு.க., வினர் சார்பாக புதிதாக கொடிகம்பம் நடுவதற்கு நேற்று மாலை ஏற்பாடு நடந்துள்ளது. கொடிகம்பம் நடும் பகுதி அருகே வசிக்கும் பா.ம.க.,வைச் சேர்ந்த ஜவஹர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அப்போது தி.மு.க.,வினருக்கும், ஜவஹருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. அப்போது, பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஜவஹர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்து சென்ற பா.ம.க., மாவட்ட செயலர் மகேஷ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் செவிலிமேடு பகுதியில், வந்தவாசி சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., முரளி, அவர்களிடம் பேச்சு நடத்தி, அவங்களை அங்கிருந்து அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.