உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னை விமான நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, இ - மெயில் வாயிலாக 5வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, ஒரு இ - மெயில் வந்தது.அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அவை வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, விமான நிலைய இயக்குனர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையில், அவசர கூட்டம் நடத்தப்பட்டது.வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சோதனை நடத்தினர். விமான நிலையத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்தும், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளி என்பது தெரியவந்தது.எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வந்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார், பாதுகாப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இரு வாரங்களில், சென்னை விமான நிலையத்துக்கு மொபைல் போன், இணையதளம், 'இ - மெயில்' வாயிலாக ஐந்தாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை