உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் முருகன் கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்

குன்றத்துார் முருகன் கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்

குன்றத்துார், குன்றத்துார் மலை மீதுபிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள, ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது.அறங்காவலர் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு முதல் பிரம்மோத்சவ விழா நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, இந்தாண்டு 2ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா நேற்று துவங்கியது.அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் கொடியேற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து காலை 8:00 மணிக்கு கேடய வாகனத்திலும், மாலை 6:00 மணிக்கு தங்க மயில் வாகனத்திலும் முருகப்பெருமான் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரம்மோத்சவ விழாவின் 5ம் நாள் திருக்கல்யாணமும், 7ம் நாள் ரத உத்சவமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங் காவலர் குழு தலைவர் செந்தாமரைக் கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதாகார்த்திகேயன், சரவணன், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை