உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார், டூ - வீலர் மோதல் வாலிபர் உயிரிழப்பு

கார், டூ - வீலர் மோதல் வாலிபர் உயிரிழப்பு

அச்சிறுபாக்கம் : சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 30. இவர், நேற்று முன்தினம், தன் குடும்பத்தினருடன், அச்சிறுபாக்கம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் உள்ள உறவினர் சென்றார்.இரவு 8:30 மணிக்கு பெருமாள் மற்றும் அவரின் அண்ணன் முருகன் ஆகியோர் 'ஹோண்டா கரிஸ்மா' இருசக்கர வாகனத்தில் கடமலைபுத்துார் நோக்கி சென்றனர்.அப்போது, மின்னல் சித்தாமூர் சுடுகாடு அருகே, எதிரே வந்த 'சுசூகி எர்டிகா' கார் மீது மோதியதில், பெருமாள் கீழே விழுந்துள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.உடனே, அவரை மீட்ட உறவினர்கள், அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், உயர் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று, சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஒரத்தி போலீசார், தலைமறைவாக உள்ள கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை