உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / களியனுார் தெருக்களுக்கு சிமென்ட் சாலை

களியனுார் தெருக்களுக்கு சிமென்ட் சாலை

களியனுார்:வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், புதிய காலனி, மாரியம்மன் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெருவில் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்த இத்தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.இத்தெருக்களுக்கு புதிதாக சாலை அமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் நிர்வாக அனுமதி அளித்தும், ஏழு மாதங்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது.இதுகுறித்து ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் மனு அளித்து இருந்தார்.இதையடுத்து, 'பெரி அர்பன்' எனப்படும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம சாலையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மொத்தம் 50.7 லட்சம் ரூபாய் செலவில் 800 மீட்டர் நீளத்திற்கு இத்தெருகளுக்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ