உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சத்தான உணவுகளை சாப்பிட மாணவியருக்கு கலெக்டர் அறிவுரை

சத்தான உணவுகளை சாப்பிட மாணவியருக்கு கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தியில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்றார். மாகரல் குறு வட்டத்திற்குட்பட்ட கம்மராஜபுரம், சித்தாத்துார், இளையனார்வேலுார், ஆசூர், அங்கம்பாக்கம், தம்மனுார், களக்காட்டூர், மேல்புத்துார், நெல்வேலி, விச்சந்தாங்கல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் மனுக்களை பெற்றனர்.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரிந்துரை செய்தார். இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார்.மதிய உணவு வேளையில் போடப்படும் உணவுப் பட்டியல் மற்றும் தரமானதாக இருக்கிறதா என, சோதனை நடத்தினார். இதையடுத்து, உணவு சாப்பிடும் மாணவியரிடம் கீரை, காய்கறிகள் என, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ