மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
14 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
14 hour(s) ago
இன்றைய மின் தடை
14 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
14 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவை தவிர, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையினர் பலர் பணியாற்றுகின்றனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பேரூராட்சி துறை, தேர்தல் பிரிவு உள்ளிட்ட பல அலுலகங்கள் இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களில், 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அன்றாடம் காலை 10:00 மணிக்கு பணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் பலர், காலை 11:00 மணிக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.சில ஊழியர்கள், காலை 11:00 மணிக்கு வந்து, மாலையில் தாமதமாக வீட்டுக்கு செல்கின்றனர். இஷ்டம் போல் அலுவலகம் வருவதும், செல்வதும் தொடர்கிறது.பொதுமக்கள் அரசு ஊழியர்களை சந்திக்க காலை வேளையில், அலுவலகத்திற்கு செல்லும்போது, இருக்கையில் ஊழியர்கள் இல்லாமல் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.எனவே, இஷ்டம் போல் அலுவலகம் வரும் ஊழியர்கள் மீது கலெக்டர் கலைச்செல்வி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago