உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தின் பிரதான முக்கிய சாலைகளான காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட தெருக்களில் மழையின்போது, சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுதும் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலெச்செல்வி மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி, காஞ்சிபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த 15 நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களுடன் இணைந்து, துறை பராமரிப்பில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்வாய்களையும் துார்வாரி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை