உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டைம் கீப்பர் அலுவலகத்தில் பெருச்சாளிகள் நடமாட்டம் அச்சத்தில் காஞ்சி பஸ் நிலையத்தில் பயணியர்

டைம் கீப்பர் அலுவலகத்தில் பெருச்சாளிகள் நடமாட்டம் அச்சத்தில் காஞ்சி பஸ் நிலையத்தில் பயணியர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர், செய்யாறு, திருவண்ணாமலை, மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில், நகர பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலகம், பழைய தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்' கில் இயங்கி வருகிறது.இங்கு, காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், பேருந்து நடையின்போது டிக்கெட் வசூல் தொகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது.தகரத்தால் செய்யப்பட்ட இந்த 'பங்க்' முறையான பராமரிப்பு இல்லாததால், கூரையிலும், அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்கு ஒழுகுவதால், ஆவணங்கள் மழையில் நனைந்து சேதமாகிறது.பங்க்கின் உட்புற அடித்தளமான, தரைப்பகுதியில் ஓட்டை இருப்பதால் அதன் வழியாக உள்ளே வரும் பெருச்சாளிகள், வாசல் வழியாக வெளியேறுகின்றன.பெருச்சாளிகள் நடமாட்டம் இருப்பதால், நேர காப்பாளர் அலுவலகத்திற்கு, பேருந்து இயக்கம் குறித்து பதிவு செய்ய வரும் ஓட்டுனர், நடத்துனர்கள், பேருந்தில் பயணிக்க விபரம் கேட்க வரும் பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.எனவே, 'காயலான்' கடைக்கு போடவேண்டிய நிலையில், ஓட்டை உடைச்சலாக உள்ள, காஞ்சிபுரம் நகர பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலக இயங்கி வரும் பழைய தகர 'பங்க்'கை அகற்றிவிட்டு, புதிதாக கான்கிரீட் கட்டடத்தில், நேர காப்பாளர் அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்