உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் கால்வாய்ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?உத்திரமேரூர் பேரூராட்சி 4வது வார்டில் கேதாரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரையொட்டி சுண்ணாம்புக்கார தெரு உள்ளது. இந்த தெருவில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதியை அங்குள்ள தனி நபர், சிமென்ட் கான்கிரீட் தரை ஏற்படுத்தி தன் சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.இதனால், கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் அடைப்பு ஏற்படும் நேரங்களில், அதை கண்டறிந்து சீர் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதி கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ். குணசேகரன்,உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை