| ADDED : ஆக 15, 2024 10:44 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட அமணம்பாக்கம் பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு சாலை வசதி இல்லை. இதனால், ஒவ்வொரு மழைக்கும் இங்குள்ள மண் சாலை, சகதியான சாலையாக மாறி, இப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும், இங்கு சாலை அமைப்பதற்கு பதில், ஊராட்சியினர் கட்டட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மோசமான சாலையில், நடக்க முடியாமல் சென்று வருகின்றனர். பெண்கள் வயதானோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், மோசமான சாலையில் பயணிக்க முடியாமல் விழுந்து காயமடைகின்றனர்.பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் இப்பகுதியினர், இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றம் குன்றத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.