உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மேன்ஹோல் மூடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதமடைந்த மேன்ஹோல் மூடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநக ராட்சி, ராஜாஜி மார்க்கெட் அமைந்துள்ள ரெட்டிபேட்டை தெருவின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்குவதற்காக 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன், கனரக வாகனம் இச்சாலையில் சென்றபோது, 'மேன்ஹோல்' மூடி உடைந்துவிட்டது.இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் 'மேன்ஹோல்' உடைந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, உடைந்த நிலையில் உள்ள பழைய மூடியை அகற்றிவிட்டு, 'மேன்ஹோல்' மீது, புதிதாக மூடி அமைத்து சீரமைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை