உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கால் ஏனாத்துாரில் விபத்து அபாயம்

அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கால் ஏனாத்துாரில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சமத்துவபுரத்தில் இருந்து, கட்டவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏனாத்துார் சமத்துவபுரம் கிராமத்தினர், கட்டவாக்கம், செட்டியார்பேட்டை, காரப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு, பல்வேறு வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம், ஐந்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இதில், தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு சேதம் ஏற்பட்டு, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிக்கிறது.இது, ஏனாத்துார் சமத்துவபுரம் கிராமத்தில் இருந்து, கட்டவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விளக்கினை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ