| ADDED : ஏப் 12, 2024 10:38 PM
எடையார்பாக்கம்:மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில் இருந்து, ஒண்டிகுடிசை கிராமம் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில், அபாயகரமான வளைவுகள் உள்ளன.இந்த வளைவுகளில் போதிய எச்சரிக்கை தடுப்பு மற்றும் பலகை இல்லை. மேலும், சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியுள்ளன.குறிப்பாக, ஒண்டிகுடிசை, கண்டிவாக்கம் ஆகிய சாலை பகுதிகளில், ஆபத்தான மரண பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த சேத சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகின்றன. ஆட்டோ மற்றும் லோடு வாகனங்கள் செல்லும் போது, இருசக்கர வாகனம் ஒதுங்கும் போது, வாகனங்கள் வயலில் கவிழும் நிலை உள்ளது. எனவே, எடையார்பாக்கம் - புரிசை இடையே, வளைவுகளில் சாலையோர தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.