உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 1,413 ஓட்டு சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

1,413 ஓட்டு சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,413 ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலையொட்டி, 2,825 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆய்வு செய்ததில், 1,413 ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இடங்களை தேர்வு செய்தனர்.இதுமட்டுமல்லாமல், பதற்றமான 755 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமராக்கள் பொருத்தவும் இடங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது, ஓட்டுச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்