உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துப்பாக்கி சுடும் போட்டி வீராங்கனையருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதக்கம் அணிவிப்பு

துப்பாக்கி சுடும் போட்டி வீராங்கனையருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதக்கம் அணிவிப்பு

சென்னை : தமிழக காவல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள, கமாண்டோ பயிற்சி பள்ளியில், பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது.முதல் நாளில், கைத்துப்பாக்கி, ரைபிள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற, எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை கான்ஸ்டபிள் பாராமிலா, தமிழக காவல் துறையின் எஸ்.ஐ., துர்கா, அசாம் காவல் துறை கான்ஸ்டபிள் இட்டு புயான் உள்ளிட்டோருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், நேற்று நேரில் சென்று, பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இரண்டாவது நாளாக நேற்று, கைத்துப்பாக்கி சுடும் போட்டி எண்: 3ல், 30 - 40 மீட்டர் ரன் ஷூட் போட்டியில், தமிழக காவல் துறையின் தலைமை காவலர் பாரதி முதல் இடத்தையும், அசாம் ரைபிள்ஸ் கான்ஸ்டபிள் ஜூலியா தேவி இரண்டாம் இடத்தையும், தமிழக காவல் துறை எஸ்.ஐ., சுதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ரைபிள் சுடும் போட்டி எண்: 3ல், 300 மீட்டர் ப்ரோன் போட்டியில், அசாம் காவல் துறை கான்ஸ்டபிள் பிரியங்கா போரோ முதல் இடத்தையும், மற்றொரு கான்ஸ்டபிள் திவ்யா சைனி இரண்டாம் இடத்தையும், இந்தோ - திபெத் எல்லைப்படை கான்ஸ்டபிள் மம்தா ஒலி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.கைத்துப்பாக்கி போட்டி எண்: 4ல், 50 மீட்டர் ஸ்னாப் ஷூட்டிங் ப்ரோன் பொசிஷன் போட்டியில், எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பாராமிலா முதல் இடத்தையும், கர்நாடக காவல் துறை டி.எஸ்.பி., நிகிதா இரண்டாம் இடத்தையும், தமிழக காவல் துறை தலைமை காவலர் பாரதி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ரைபிள் சுடும் போட்டி எண்: 4ல், 300 மீட்டர் ஸ்னாப் போட்டியில், உ.பி., காவல் துறை கான்ஸ்டபிள் சரோஜ் முதல் இடத்தையும், தமிழக காவல் துறை கான்ஸ்டபிள் சோனியா இரண்டாம் இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் கஜோல் சவுதரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.கார்பைன் சுடும் போட்டி எண்: 1ல், 25 மீட்டர் பேட்டீல் கிரவுச் போட்டியில், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் தேஜஸ்வரி முதல் இடத்தையும், தமிழக காவல் துறை கான்ஸ்டபிள் சுசி இரண்டாம் இடத்தையும் மற்றொரு காவலர் கீதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை