உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலவாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சாலவாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மே 28ம் தேதி, கொடியேற்றுதலுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.கடந்த 7ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், அதைத் தொடர்ந்து தினசரி அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் துாது, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.நேற்று முன்தினம் பதினெட்டாம் நாள் போரில் துரியோதனனை பீமன் வீழ்த்தி வெற்றி கண்ட படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அக்னி கரகம் சுமந்தும், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பெண் பக்தர்கள் தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ