உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோட்டூர் சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

கோட்டூர் சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

கோட்டூர்:மதுரமங்கலம் அடுத்த எடையார்பாக்கம் ஊராட்சியில் இருந்து, கோட்டூர் ஊராட்சிக்கு செல்லும் ஏரிக்கரை ஓரம் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, கோட்டூர் ஊராட்சி மக்கள் எடையார்பாக்கம், மேலேரி, பரந்துார் வழியாக காஞ்சிபுரம் மற்றும் மதுரமங்கலம் வழியாக சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில், இந்த ஏரிக்கரை சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இச்சாலையோர ஏரிக்கரை பகுதியில், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், குடிநீர் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண்ணை சரியாக மூடவில்லை. இதனால், மண் சாலையோரம் சிதறி கிடக்கிறது. கோடை மழை பெய்யும் போது, சாலை முழுதும் சகதியாக மாறும் சூழல் உள்ளது.இந்த சகதியில் வாகனங்கள் செல்லும் போது, நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, எடையார்பாக்கம் ஊராட்சியில் இருந்து, கோட்டூர் ஊராட்சிக்கு செல்லும், ஏரிக்கரை பிரதான சாலையோரம் சிதறி கிடக்கும் மண்ணை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்