உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

சென்னை:மதுராந்தகம் ஒன்றியம், ஜானகிபுரத்தில், 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூதலிங்கேஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள பழமையான திருக்காமிநாதேஷ்வரர் கோவிலின் திறந்தவெளி மண்டபத்தில், பழமையான சிற்பம் பாதி புதைந்த நிலையில் உள்ளது.இது குறித்து, ஜானகிபுரத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர், வரலாற்று ஆய்வு சங்கத்துக்கு தகவல் அளித்தார். அதன் ஆலோசகர் விழுப்புரம் வீரராகவன் தலைமையில், அவ்வூரைச் சேர்ந்த ஆய்வாளர் வடிவேல் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்தனர்.சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலின் திறந்தவெளி மண்டபத்தின் வடக்கு பகுதியில், மண்ணில் புதைந்த நிலையில் மூத்த தேவி சிலை ஒன்று இருந்து. 2 அடி உயரம், ஒன்னேகால் அடி அகலம் உள்ள இதை ஆய்வு செய்த போது, 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. மூத்ததேவியின் வலதுபுறம், வலக்கரத்தில் தண்டாயுதம் தாங்கி, நந்தி முகத்துடன் உள்ள மாந்தனும், இடதுபுறம், ஒய்யாரமாக சாய்ந்த நிலையில் உள்ள மாந்தியின் வலக்கை அபய நிலையிலும், இடக்கை கடிஹஸ்த நிலையிலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை