மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
சென்னை : மாவட்டங்களுக்கு இடையிலான ரக்பி போட்டியின் பெண்கள் பிரிவில், சென்னை மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழ்நாடு ரக்பி கால்பந்து சங்கம், ஆர்.எம்.கே., இன்டர்நேஷனல் பள்ளி குழுமம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான ரக்பி கால்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள, அப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை, திருவள்ளூர், கரூர், திருப்பத்துார் உள்ளிட்ட எட்டு மாவட்ட அணிகளும், ஆண்கள் சீனியர் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் சென்னை, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கரூர், திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்ட அணிகள் என, எட்டு அணிகளும் பங்கேற்றுள்ளன. பெண்கள் சீனியர் பிரிவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்ட அணிகள் பங்கேற்றன. 'நாக் - அவுட்' முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பெண்கள் சீனியர் பிரிவில் சென்னை அணி முதலிடத்தையும், திருவள்ளூர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.ஆண்களுக்கான போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025