உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாவட்ட வாலிபால் போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்

மாவட்ட வாலிபால் போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்

சென்னை, ; சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து, 6வது சென்னை சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகின்றன.மாவட்ட அளவிலான போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், இன்று காலை 9:00 மணிக்கு துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. இதில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும் விபரங்களுக்கு, சென்னை மாவட்ட வாலிபால் சங்க அலுவலகம் அல்லது 94448 42628, 98418 16778 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நேற்று தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ