உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாட்டு தொழுவமாக மாறிய களியனுாரில் குடிநீர் தொட்டி வளாகம்

மாட்டு தொழுவமாக மாறிய களியனுாரில் குடிநீர் தொட்டி வளாகம்

களியனுார் : வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சி, பஜனை கோவில் தெரு அருகில், அப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பஜனை கோவில், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிவாசிகள் கூடுதல் தண்ணீர் தேவைக்கு குடிநீர் தொட்டிநீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்காததால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி வீணாகி வருவதால், அப்பகுதி மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. எனவே, மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர களியனுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ