மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
2 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
2 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
2 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் திரவுபதியம்மன் கோவிலில், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா துவங்கியது.இதில், தினமும் பிற்பகல் 1:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருடிராயபுரம் முனுசாமி இசைவாசித்து வருகிறார்.கடந்த 10ம் தேதி முதல்,தினமும், இரவு 10:00 மணிக்கு சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.இதில், கடந்த 14ம் தேதி அர்ச்சுனன் தபசும், நேற்று இரவு, கிருஷ்ணன் துாது நாடகமும் நடந்தது. நாளை இரவு கர்ணன் மோட்சம் நாடகம் நடைபெறுகிறது.மஹாபாரத விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago