உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கும்மிருட்டு மேம்பாலம் குன்றத்துாரில் விபத்து அச்சம்

கும்மிருட்டு மேம்பாலம் குன்றத்துாரில் விபத்து அச்சம்

குன்றத்துார்:குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள சிப்காட் தொழிற் பூங்கா, குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை முடித்து விட்டு, இரவு நேரத்தில் இந்த வழியாக ஏராளமான தொழிலாளர்கள் செல்கின்றனர். மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது நடந்து செல்வோரிடம் வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி