கொசுவத்தியால் தீ விபத்து; 46 நாளுக்கு பின் இளைஞர் பலி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 28; கூலி தொழிலாளி. இவர், கடந்த ஜூலை 26ம் தேதி, வீட்டில் கொசு வலை கட்டி துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, கொசுவத்தி சுருளில் இருந்த நெருப்பு, கொசு வலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த தினேஷ்குமார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு 46 நாட்களாக சிகிச்சை பெற்ற அவர், நேற்று, உயிரிழந்தார். இதுகுறித்து, சகோதரர் மணிகண்டன், விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் அளித்தார்.