உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத தரைப்பாலம்: வாகன ஓட்டிகள் அவதி

தடுப்பு இல்லாத தரைப்பாலம்: வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வயலுாரிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கிளாய் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் ஒன்றிய சாலையில் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் சிறிய தரைப்பாலம் உள்ளது. அவ்வழியாக தினமும், அரசு, தனியார் பேருந்து பள்ளி, கல்லுாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து மற்றும் கனரக வாகனம் என, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சாலையும் குறுகலாக இருப்பதால் வாகனங்களுக்கு வழிவிடும்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தரைப்பாலத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும், சாலையை அகலப்படுத்தவும் சாலையோர மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ