உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை மணிமண்டபத்தில் இலவச மருத்துவ முகாம்

ஓரிக்கை மணிமண்டபத்தில் இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவர் மணிமண்டபத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 24ம் தேதி சாதுர்மாஸ்ய விரதம் துவக்கினார். இந்நிலையில், மஹா பெரியவர் மணிமண்டப வளாகம் அருகே அமைந்துள்ள மருத்துவமனையில் காலையில் ஆயுர்வேத மருத்துவ முகாமும், மாலையில் அலோபதி மருத்துவ முகாமும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் டீன் சுவாமிநாதன் மேற்பார்வையில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெறுகிறது.மாலையில் நடைபெறும் அலோபதி மருத்துவ முகாம் காஞ்சிபுரம் ஏனாத்துாரில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் சார்பில் அதன் தலைவர் பம்மல்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை