உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, இளைஞர்கள் சிலர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததுஇதையடுத்து, புதிய ரயில் நிலைய உயர்மட்ட பாலம் கீழ், போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அய்யங்கார்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் பிரேம்குமார், 19. என்ற இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ