உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை கொட்டும் இடமான கல்லுகுளக்கரை

குப்பை கொட்டும் இடமான கல்லுகுளக்கரை

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் கல்லுகுளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடி ஆதாரமாக விளங்கி வந்த இக்குளக்கரையில், முன்னோர்களுக்கு ஈமக்கிரியை செய்து வந்தனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியினர் குளத்தில் துணி துவைக்கவும், குளிக்கவும்,நீச்சல் பழகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் முறையாக பராமரிக்காததால், குளத்தில் செடி, கொடிகள் மண்டி பாழடைந்துள்ளது.குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயில் சிலர் முறைகேடாக கழிவுநீர் விடுவதால், குளத்துநீர் மாசடைந்துள்ளது. தற்போது, குப்பை கொட்டும் இடமாகவும் குளக்கரை மாறியுள்ளது.எனவே, நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கிய சின்ன காஞ்சிபுரம் கல்லுகுளத்தில் குப்பை கொட்டுவதையும், கழிவுநீர் விடுவதையும் தடுத்து நிறுத்தி, மண்டிகிடக்கும் புதர்களை அகற்றி கல்லுகுளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி