சென்னை, ஆக. 7-பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில், கோ - கோ மற்றும் வாலிபாலில், கோல சரஸ்வதி பள்ளி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.இதில் தடகளம், வாலிபால், கால்பந்து, கோ - கோ, பேட்மின்டன் உட்பட மொத்தம், 10 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் கீழ்ப்பாக்கம், கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி, நேரு பூங்கா விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் நடக்கின்றன.நேற்று துவங்கிய வாலிபால் போட்டியில், ஆண்களில் கோல பெருமாள் பள்ளி, பெண்களில் கோல சரஸ்வதி பள்ளி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.அதேபோல் கால்பந்தில், இருபாலரிலும் கீழ்ப்பாக்கம் பவன்ஸ் பள்ளி காலிறுதிக்கு தகுதி பெற்றது. கோ - கோ போட்டியில் மாணவியரில், கோல சரஸ்வதி பள்ளி காலிறுதிக்குள் நுழைந்தது. கூடைப்பந்து (மாணவர்கள்):பள்ளிகள் / புள்ளிகள்* கீழ்ப்பாக்கம் கோல சரஸ்வதி vs சாந்தோம் மெட்ரிக் / 19 - 6* சேத்துப்பட்டு, எம்.வி.எம்., vs அண்ணா நகர் சின்மயா வித்யாலயா / 17 - 10வாலிபால் (மாணவர்கள் - நாக் அவுட்)* அம்பத்துார், சேது பாஸ்கரா vs ஒய்.எம்.சி.ஏ., / 15 - 8, 15 - 10* சாந்தோம் மெட்ரிக் vs அயனம்பாக்கம் வேலம்மாள் / 16 - 14, 15 - 10* அம்பத்துார் சேது பாஸ்கரா vs அண்ணா நகர் சின்மயா வித்யாலயா/ 16 - 6, 15 - 8 செஸ் போட்டிகள் முடிவு:பள்ளி/ இடம் / வெற்றி விபரம் மாணவியர்சின்மயா வித்யாலயா / அண்ணா நகர் / முதலிடம்வேலம்மாள் / ஆலப்பாக்கம்/ இரண்டாமிடம்மாணவர்கள்அமிர்த வித்யாலயா / கே.கே., நகர்/ முதலிடம் வேலம்மாள் / ஆலப்பாக்கம்/ இரண்டாமிடம்