உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மானாவாரி நிலங்களில் வேர்க்கடலை சாகுபடி

மானாவாரி நிலங்களில் வேர்க்கடலை சாகுபடி

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றிய கிராம பகுதிகளில், ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் நிலங்களை தவிர்த்து குறிப்பிட்ட நிலப்பரப்பில் மானாவாரி நிலங்கள்உள்ளன.உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதியில் சில தினங்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது.இதையடுத்து மதூர், பினாயூர், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் உழவு பணி மேற்கொண்டு வேர்க்கடலை விதையிட்டு வருகின்றனர்.தற்போது வேர்க் கடலை சாகுபடி செய்யும் நிலங்களில், இந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில் அறுவடைப் பணி மேற்கொள்ளப்படும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்