உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

வாலாஜாபாத்: வாலாஜாபாதில் இருந்து, அவலுார், கன்னடியன் குடிசை, கம்பராஜபுரம், தம்மனுார், இளையனார்வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பங்க் கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வாலாஜாபாத் பகுதியின் பல கடைகளில் போலீசார் சோதனையிட்டனர். இதில், வாலாஜாபாத் செட்டித் தெரு பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்துள்ள ஜாபா அலிகான், 39, என்பவரது கடையில் இருந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல்செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஜாபா அலிகான் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி