உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சங்கரா கல்லூரியில் கைவினை பொருள் கண்காட்சி

காஞ்சி சங்கரா கல்லூரியில் கைவினை பொருள் கண்காட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், கல்லுாரி சந்தை என்ற பெயரில், மகளிர் சுய உதவிக் குழுவின் கைவினைப் பொருட்காட்சி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.கல்லுாரி முதல்வர் முனைவர் கலை இராம.வெங்கடேசன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி கண்காட்சியை துவக்கி வைத்தார்.கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருட்கள், நகைகள், சிறுதானிய உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டு மற்றும் காட்டன் சேலைகள், உணவுப் பொருட்கள், ஹெர்பல் தயாரிப்புகள், ஆகியவை இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி நிறைவு இன்று நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை