உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்த சுகாதார அமைச்சர்

தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்த சுகாதார அமைச்சர்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. வல்லம், வல்லக்கோட்டை, எறையூர், மாத்துார், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை கேட்டறிந்து, வருகை பதிவேடு, மகப்பேறு சிகிச்சை வார்டு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், மருந்தகத்தில் உள்ள மாத்திரையின் இருப்பு, நாய்க்கடி தடுப்பூசிகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தாார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி