உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயரமான சாலையால் விபத்து அபாயம்

உயரமான சாலையால் விபத்து அபாயம்

வையாவூர்,:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில் இருந்து வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை வழியாக களியனுார், நத்தப்படே்டை, முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தர்மநாயக்கன்பட்டரை சாலையில், சிமென்ட் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், குளம் அமைந்துள்ள பகுதியில் சாலையோரம் மண் அணைக்காமல் உள்ளதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், ஏனாத்துாரில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, தர்மநாயக்கன்பட்டரையில் உயரமாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் அணைத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை