உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாடகை கொடுக்காததால் ஆத்திரம் மாடி படிக்கட்டை இடித்த ஹவுஸ் ஓனர்

வாடகை கொடுக்காததால் ஆத்திரம் மாடி படிக்கட்டை இடித்த ஹவுஸ் ஓனர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மாடி வீட்டில் வசித்தவர் வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் மாடி படிக்கெட்டை இடித்து தள்ளினார்.காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு கலெக்டர் அலுவலக வளாகம், வானவில் நகரிலும் சொந்த வீடு உள்ளது.இந்த வீட்டின் மாடி குடியிருப்பில், வேணுகோபால் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார்.இந்நிலையில், வேணுகோபால் சில மாதங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளார். இதனால், வாடகை செலுத்த முடியவில்லை. அதையடுத்து, அவர்களை வீடு காலி செய்ய வேண்டும் என, வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் கூறியும், வேணுகோபால் காலி செய்யவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசன், நேற்று முன்தினம் வீட்டின் மாடி படியை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து உடைத்துள்ளார்.மாடி வீட்டில் இருந்த வேணுகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு, வீட்டிற்குள்ளேயே தவித்தனர்.இதையடுத்து, வேணுகோபால் காஞ்சிபுரம் போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள், மாடி வீட்டில் இருந்தவர்களை கயிறு கட்டியும், ஏணியை பயன்படுத்தியும் பத்திரமாக மீட்டனர்.வாடகைக்கு இருந்தவர், வீட்டு வாடகை தராததால், தன் வீட்டின் மாடி படிகளை உரிமையாளரே இடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ