உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரம் வெட்ட இயந்திர பயன்பாட்டு முறை தொழிலாளர்கள் பாதிப்பு

மரம் வெட்ட இயந்திர பயன்பாட்டு முறை தொழிலாளர்கள் பாதிப்பு

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர், திருவானைக்கோவில், களியப்பேட்டை,சீட்டஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருளர் குடும்பத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.இவர்கள், செங்கல் சூளைகளில் கல் அறுப்பது,விறகு பிளப்பது மற்றும் மரம் ஏறுதல், மரம் வெட்டுதல், தேன் அழித்தல் உள்ளிட்ட பல கடினமான பணிகள் மேற்கொள்கின்றனர்.குறிப்பாக மரம் வெட்டும் தொழிலில் அதிக அளவில் இருளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அத்தொழில் அவர்களுக்கு லாபகரமானதாகவும் உள்ளது. இத்தொழில் வாயிலாக டன்னுக்கு 1,800 ரூபாய் வரை கூலியாக பெறுகின்றனர்.ஆண், பெண் ஒருங்கிணைந்த குழு அமைத்து பணி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக மரம் வெட்ட இயந்திரப் பயன்பாட்டு முறை கிராமங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது இத்தொழிலுக்கு இருளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு கூலி தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.இது குறித்து, திருவானைக்கோவில் பகுதி இருளர்கள் கூறியதாவது:மரம் வெட்டுதல் கடினமான பணியாகும். கடந்த காலங்களில் இந்த பணிக்கு அதிக அளவில் இருளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். தற்போது இயந்திரப் பயன்பாட்டு முறையால் அனைத்து தரப்பு கூலி தொழிலாளர்களும் இப்பணி செய்கின்றனர். இதனால், எங்களுக்கு வேலை தட்டுப்பாடு நிலை உள்ளது,இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி