மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
21 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
21 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
21 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா, நிகர்நிலைப் பல்கலையில், கலை மற்றும் அறிவியல் துறை பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு நேற்று துவங்கப்பட்டது.இதில், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ - மாணவியர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மலர் கொத்தும், இனிப்பும் வழங்கி வரவேற்றனர்.சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா, நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சீனிவாசு தலைமை வகித்தார்.பதிவாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். மாணவர்கள் சேர்க்கை குழு தலைவர் முனைவர் பேராசிரியர் வெங்கட்ரமணன் அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் புல தலைவர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, நிதி நிர்வாகி, பல்துறை சார்ந்த தலைவர்கள், குழு தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.முனைவர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago