உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை திறக்க சீட்டணஞ்சேரியினர் வலியுறுத்தல்

ரேஷன் கடை திறக்க சீட்டணஞ்சேரியினர் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இப்பகுதியில், ரேஷன் கடை இல்லாததால், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.இதனால், போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடி இருந்து வந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, சீட்டணஞ்சேரியில் புதிதாக ரேஷன் கடை கட்ட ஒன்றிய பொது நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான பணி துவங்கப்பட்டது.இரண்டு மாதங்களுக்கு முன் பணி முழுமையாக நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது. எனினும், அப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலேயே ரேஷன் கடை தொடர்ந்து இயங்குகிறது. எனவே, ரேஷன் கடைக்கான புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி