மேலும் செய்திகள்
கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்
32 minutes ago
உத்திரமேரூர்,உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் இருந்து, காவிதண்டலம் வழியாக களியப் பேட்டை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், காவிதண்டலம் அருகே பிரிந்து விச்சூர் கிராமம் வழியாக செல்லும் மற்றொரு சாலை உள்ளது.மூன்று கிராமங்களை இணைக்கும் இந்த கூட்டுச்சாலை மிகவும் குறுகியதாகும்.களியப்பேட்டை சுற்றியுள்ள பகுதியினர், இருசக்கர வாகனங்கள் மூலம் இச்சாலை வழியாக தினசரி செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.போக்குவரத்து உள்ள இச்சாலையில், எப்போதும் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், மூன்று கிராமங்களுக்கான கூட்டுச்சாலை அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, இக்கூட்டுச் சாலை அருகே காவிதண்டலம், களியப்பேட்டை, விச்சூர் கிராமத்தை நோக்கிய சாலை பகுதியிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
32 minutes ago