| ADDED : ஜூன் 29, 2024 01:18 AM
ஸ்ரீபெரும்புதுார்:தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுகிறது.அதன்படி, ஸ்ரீபெரும்புதுாரில் படிக்கும் மாணவர்களுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கு இலவச சைக்கிள் வழங்க அதன் உதிரிபாகங்கள் வந்துள்ளன.சைக்கிள் டயர்கள், ஹேண்டில் பார்கள், சீட்கள், பெடல்கள் ஆகியவை தனித்தனியாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை, பொருத்தும் பணி ஸ்ரீபெரும்புதுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.உதிரிபாகங்கள் பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த பின், விரைவில் மாணவியருக்கு வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.