மதகில் மண் மூட்டைகளால் நீர் பாசனம் பெறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, நீர்வள ஆதாரத் துறைகட்டுப்பாட்டில், வேடல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் நீரைபயன்படுத்தி, வேடல் கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் மானாவாரிநெல் விதைத்து,அறுவடை செய்துவருகின்றனர்.ஏரிநீர் பாசனத்திற்கு சவுகரியமாக, நான்கு இடங்களில் பிரதான மதகுகள் உள்ளன. இதில், வேடல் கிராமத்திற்கு போதிய தடுப்பு இல்லாததால், விவசாயிகள் மண் மூட்டைகளை போட்டு, ஓட்டை அடைத்துள்ளனர்.இதனால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, மதகில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வேடல் நீர்வள ஆதாரத் துறை ஏரியில், மதகினை சீரமைத்து தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.