உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் இன்று ஜமாபந்தி துவக்கம்

வாலாஜாபாதில் இன்று ஜமாபந்தி துவக்கம்

வாலாஜாபாத்:வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி நிகழ்ச்சி, அனைத்து வட்டாரங்களிலும் ஆண்டுதோறும் மே மாதம் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு மே மாதம், லோக்சபா தேர்தல் நடத்தை விதி காரணமாக நடத்த இயலாமல் ஜூன் மாதம் நடக்கிறது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இன்று துவங்குகிறது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் துவக்கப்படும் இந்நிகழ்ச்சியில், வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் மற்றும் தொடர் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கலாம்.வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தினர் இன்றும், வரும் 18ம் தேதியும் மனுக்கள் அளிக்கலாம். மாகரல் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் 19ம் தேதியும், வாலாஜாபாத் குறுவட்டத்திற்கு உட்பட்டோர் 20 மற்றும் 21ம் தேதிகளிலும் பங்கேற்று மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.இந்த தகவலை வாலாஜாபாத் தாசில்தார் சதீஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ