ஜெயலலிதா பிறந்த நாள் ஒரத்துாரில் கொண்டாட்டம்
ஸ்ரீபெரும்புதுார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள், தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் ஊராட்சி சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் ஒரத்துார் என்.டி.சுந்தர் தலைமை தாங்கி, கட்சி கொடி ஏற்றி, ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு வேட்டி, சேலையும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும் வழங்கினார். 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், குன்றத்துார் ஒன்றிய கழக துணை செயலர் கற்பகம் சுந்தர், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், கிளை கழக செயலர் ஏழுமலை, ஆனந்தன், பாபு, ராமசந்திரன், துரைராஜ் , சந்திரபாபு, முரளிதரன், சரவணன், ரஞ்சித்குமார், ரவிச்சந்திரன், மாணிக்கராஜ், துளசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.